![]() எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
-
21 ஜன., 2025
நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை அனுரகுமார மறந்து விட்டார்! [Tuesday 2025-01-21 16:00]
புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் சட்டம் அமுலில் இருக்கும்! [Tuesday 2025-01-21 16:00]
![]() பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். |
சென்னைப் பயணத்தை தடுக்க சுமந்திரன் சூழ்ச்சி?- நாடாளுமன்றில் சிறீதரன் குற்றச்சாட்டு. [Tuesday 2025-01-21 16:00]
![]() தனக்கு எதிராக போலியான பிரசாரங்களை பரப்பும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார். |
20 ஜன., 2025
அனுராவின் நேரடி கட்டளையால் கைது: ராணுவம் மன்னார் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தம் மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்
எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து- விரைவில் சட்டமூலம்! [Monday 2025-01-20 06:00]
![]() பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவேன். ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் மோசடியாளர்கள் இன்று திணறுகிறார்கள், போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். |
இராணுவ முகாமில் இருந்து 73 துப்பாக்கிகள் மாயம்! [Monday 2025-01-20 06:00]
![]() இராணுவ முகாமில் இருந்து T56 ரக துப்பாக்கிகள் 73, பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளமை தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. |
மகிந்தவுக்கு 4.6 மில்லியன் வாடகை- செலுத்தாவிட்டால் வெளியேற உத்தரவு! [Monday 2025-01-20 06:00]
![]() முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். |
மட்டக்களப்பில் நிரம்பி வழியும் குளங்கள் - வான்கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ளக்காடு! [Monday 2025-01-20 06:00]
![]() மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான் கதவுகள் 9 அடிக்கு திறக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது |
18 ஜன., 2025
யாழ். நகரில் வருமான வரி அதிகாரிகள் போல நடித்து 30 இலட்சம் ரூபா கொள்ளை! [Friday 2025-01-17 17:00]
![]() யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளது |
17 ஜன., 2025
யாழில். போலி தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த கனேடியன் பிரஜை கைது
போலி சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில்
பழிவாங்கப்படும் நொச்சிக்குளம் மக்கள் - மன்னார் பொலிசாரே பொறுப்புக்கூற வேண்டும்! [Friday 2025-01-17 05:00]
![]() மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். |
16 நாட்களில் 5 பேர் சுட்டுக்கொலை -நாட்டில் என்ன நடக்கிறது? [Friday 2025-01-17 05:00]
![]() 2025 ஆம் ஆண்டின் முதல் 16 நாட்களில் மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் உட்பட, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பாதாள உலக பிரமுகர்களால் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தக் குற்றச் செயல்களை உடனடியாக ஒடுக்கவும் இந்த நடவடிக்கைகளை வழிநடத்துபவர்களை சட்டத்தின் முன் கொண்டு வரவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார். |
வண்டிச் சவாரியில் தொடங்கிய மோதல் - இதுவரை 7 பேர் பலி! [Friday 2025-01-17 05:00]
![]() மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்று இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
15 ஜன., 2025
ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு கடிதம்! [Wednesday 2025-01-15 04:00]
![]() 25 சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது |
கூட்டுறவு தேர்தல்களில் என்பிபிக்கு பின்னடைவு! [Wednesday 2025-01-15 04:00]
![]() சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது. |
13 ஜன., 2025
பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு
எமது பிரச்சினையை பேசாமல் ஸ்டாலினுடன் செல்பி எடுக்கவா சென்றனர்? [Monday 2025-01-13 17:00]
![]() இந்தியா - தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர் |
இலங்கையில் 400 றோ உளவாளிகள்! [Monday 2025-01-13 06:00]
![]() இந்தியாவின் றோ உளவுப் பிரிவைச் சேர்ந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார். |
பிரிந்தவர்களை இணைக்க உள்ளக கலந்துரையாடல்! [Monday 2025-01-13 06:00]
![]() பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார் |
12 ஜன., 2025
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பச்சைக்கொடி! [Sunday 2025-01-12 16:00]
![]() புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது உள்வாங்கப்படவேண்டிய தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 தமிழ்த்தேசியக்கட்சிகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில், அச்சந்திப்பில் தமது கட்சி பங்கேற்று முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி தெரிவித்துள்ளது. |
11 ஜன., 2025
படுகொலையாளிகளுக்கு பொதுமன்னிப்பு, போராளிகளுக்கு விடுதலை இல்லையா? [Saturday 2025-01-11 18:00]
![]() கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பினார். |
வாளுடன் சிக்கிய 17 வயது மாணவன்! [Saturday 2025-01-11 18:00]
![]() வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் நேற்று வாள் மற்றும் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் சுழிபுரம் - பெரியபுலோ பகுதியில் வாளுடன் 17 வயது மாணவன் ஒருவனும், சுழிபுரம் - வறுத்தோலை பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் ஒரு போத்தல் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். |
தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம்.
தமிழரசு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் ஒருங்கிணைந்த அரசியலுக்கும் சிவில் தரப்பின் தலையீடு அவசியம் என அரசியல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல்
10 ஜன., 2025
அரசியல் தீர்வில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்!சிறிதரன் [Friday 2025-01-10 05:00]
![]() அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார். |
9 ஜன., 2025
ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத்தண்டனை! [Thursday 2025-01-09 16:00]
![]() இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது |
சவேந்திர சில்வாவின் அலுவலகம் மூடப்பட்டது! [Thursday 2025-01-09 16:00]
![]() முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது. |
திருப்பதியில் கூட்ட நெரிசல்: சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் பலி? [Thursday 2025-01-09 06:00]
![]() திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்கத் தினந்தோறும் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதி திருமலையில் மக்கள் கூட்டத்தால் ஏற்படும் நெரிசல் காரணமாக, ஏழுமலையானைத் தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் தான் திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு (10.01.2024) சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய இலவச தரிசன டோக்கன் வாங்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. |
ADMK இரட்டை இலை விவகாரம்: `தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இடைக்காலத் தடை
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, புகழேந்தி உள்ளிட்டோர்
பயங்கரவாத தடைச்சட்டம்- அரசின் நிலைப்பாடு என்ன? [Thursday 2025-01-09 05:00]
![]() எதிர்கட்சியில் இருக்கும்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்துவந்த அரசாங்கம் அதனை நீக்குவதற்கு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கமல் இருக்கிறது என கேட்கிறேம். இந்த சட்டத்தை இரத்துச் செய்வதா அல்லது அதற்கான திருத்தத்தைக் கொண்டு வருவதா என்பது குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார் |
அமெரிக்க தூதுவருடன் தமிழரசு எம்.பிக்கள் சந்திப்பு! [Thursday 2025-01-09 05:00]
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர் யூலி சங் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. |
கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்திற்குள் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது! [Thursday 2025-01-09 05:00]
![]() அரிசி மாபியாக்களை இல்லாதொழிப்பதை மறந்து விட்டு வாகனங்களின் உதிரிபாகங்களை அகற்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார் |
8 ஜன., 2025
தீர்வுத் திட்டம் குறித்து 25 ஆம் திகதி முக்கிய கலந்துரையாடல்! [Wednesday 2025-01-08 05:00]
![]() புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது |
இலங்கையில் 8 மாதங்களில் 28B பில்லியன் ரூபா போதை பொருட்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
கடந்த வருடத்தில் மாத்திரம் 28,158 மில்லியன் ரூபாவிற்கும்
கனடாவில் நடந்த "ஆபரேஷன் கமலா"! மோடியை சீண்டினார் வீழ்ந்தார்! ட்ரூடோ ராஜினாமாவிற்கு இந்தியாவும் காரணம்?
ஓட்டவா: இந்திய மத்திய அரசுடன் மோதல் போக்கை
அமைச்சர் வசந்த சமரசிங்கவே அரிசி மாபியாவின் தலைவர்! [Wednesday 2025-01-08 05:00]
![]() அரிசி மாபியாக்கள் இலாபமடையும் சூழலையே அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க அரிசி மாபியாக்களின் தலைவராக செயற்படுகிறார் என்பதை அச்சமில்லாமல் எம்மால் குறிப்பிட முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார் |
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் வெளிநாட்டு முதலீடுகள் வரும்! [Wednesday 2025-01-08 05:00]
![]() வவுனியா பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் |
7 ஜன., 2025
ருமேனிய- பல்கேரிய எல்லையை தாண்டிய முதலாவது பிரமுகரான தெரு நாய்
வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கான வர்த்தமானி வெளியானது! [Tuesday 2025-01-07 17:00]
![]() 2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது. |
சனல்-4 தகவல்களை அடிப்படையாக கொண்டும் விசாரணை! [Tuesday 2025-01-07 17:00]
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு மேலதிகமாக சனல் 4 ஊடகத்தில் வெளியான தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். |
சுவிஸ் குடியுரிமை விண்ணப்பங்களில் ஐந்தில் ஒன்று நிராகரிப்பு: தவிர்ப்பது எப்படி?
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திணறிய விமானங்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு
விமல் வீரவன்ச நேர்மையானவர் அல்ல! [Tuesday 2025-01-07 05:00]
![]() முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் இயலுமை அரசாங்கத்துக்கு உண்டு. ராஜபக்ஷர்கள் குறித்த விசாரணைகளுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடாக சாட்சியம் திரட்ட முயற்சிப்பது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார் |
தவணைப் பரீட்சைகள் ரத்து! [Tuesday 2025-01-07 05:00]
![]() வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தரமாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார். |
3 வினாத்தாள்கள் கசிந்தன! [Tuesday 2025-01-07 05:00]
![]() வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியே கசிந்துள்ளன. விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள் இவ்வாறு வௌியாகியுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்தார். |
6 ஜன., 2025
யாழில் இடம்பெறும் முறைகேடு! அரச ஊழியர்கள் மீது அமைச்சர் காட்டம்
யாழில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின்
கஜேந்திரகுமாரின் பேச்சுக்கான அழைப்புக் குறித்து சிறீதரன் பதில்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து
சுண்ணக்கல் கடத்தல்:கறுப்பு ஆடுகள் எவை?
உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட சங்கு கூட்டணி முடிவு! [Monday 2025-01-06 05:00]
![]() வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் |
பிணை பெற்றுத் தருவதாக இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது! [Monday 2025-01-06 05:00]
![]() மனித படுகொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை வழங்குவதற்காக, நீதவானுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, பெண்கள் மூவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் களுவாஞ்சிகுடி நீதவானின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. |
5 ஜன., 2025
இளங்குமரன் எம்.பி சட்டத்தை கையில் எடுக்க கூடாது! [Saturday 2025-01-04 17:00]
![]() தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறுவனத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகவும் சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். |
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலி! [Saturday 2025-01-04 17:00]
![]() யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இந்த இரு இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். |
அதேவேளை, தற்போது 10 நோயாளர்கள் எலிக்காய்ச்சல் நோயோடு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர், இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார் |
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைமைக் குழு கூடுகிறது! [Saturday 2025-01-04 17:00]
![]() ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுக் கூட்டம் வவுனியாவில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முதல் தடவையாக கூடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமைக்குழுவானது தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயவுள்ளது |
கனடாவில் காருக்குள் மூச்சுத் திணறி வவுனியா இளைஞன் மரணம்! [Saturday 2025-01-04 17:00]
![]() கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
4 ஜன., 2025
பொதுமக்களின் 5226 ஏக்கர் நிலங்களை ஒரே இரவில் அபகரித்த துறைமுக அதிகார சபை! [Friday 2025-01-03 17:00]
![]() துறைமுக அதிகார சபையின் காணியை மக்கள் பிடிக்கவில்லை, மக்களின் காணிகளையே இலங்கை துறைமுக அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார் |
கையெழுத்துப் போராட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிஸ்! [Friday 2025-01-03 17:00]
![]() அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் நடைபெற்ற கையெழுத்துப் போராட்டத்தை கிளிநொச்சி பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். |
3 ஜன., 2025
தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உத்தேசம்--கஜேந்திரகுமார்
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து
31 டிச., 2024
தமிழ் தலைமைகளின் ஒற்றுமையின் தேவையும் கொள்கைசார் அடிப்படையற்ற ஒற்றுமை முயற்சிகளும்
இந்தியாவின் பணக்கார மற்றும் வறுமையான முதலமைச்சர்கள் பட்டியல் வெளியானது
இந்தியாவில் மிகவும் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில்
முன்னாள் அமைச்சர் மனுஷ குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குடும்பத்துடன்
தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள்! கஜேந்திரகுமார் வலியுறுத்து!
இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்
30 டிச., 2024
கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கனடிய பிரதமரிடம் மீண்டும் கோரிக்கை! [Monday 2024-12-30 17:00]
![]() கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் பிராந்தியத்தின் லிபரல் கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
ஆட்சிக் கதிரையில் அநுர குமார திரைக்குப் பின்னால் ரில்வின் சில்வா மூக்கணாங்கயிறு யார் கையில்?
2025 நடுப்பகுதியில் மாகாணசபைத் தேர்தல்! [Monday 2024-12-30 05:00]
![]() 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
28 டிச., 2024
சுமந்திரனிற்கு ஆறுதல் பரிசு கிட்டியது
நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்ஏ.சுமந்திரனிற்கு
அரசியல் குழு தலைவர், பெருந்தலைவராக இருப்பார் மாவை! [Saturday 2024-12-28 17:00]
![]() மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும் பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார் |
தலைவர் தலைவராகவே இருப்பார்!- சிவமோகன் ஆவேசம். [Saturday 2024-12-28 17:00]
![]() தலைவரை நீக்கும் அதிகாரம் மத்தியகுழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் |
ஜெர்மனி | நாடாளுமன்றம் கலைப்பு.. பிப்ரவரியில் தேர்தல்.. அதிபர் உத்தரவு!
ஜெர்மனியில் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ஃபிராங்க்
முகப்புத்தகத்தை வைத்து எம்.பி பதவியை சீரழிக்கின்றார் அர்ச்சுனா : கடுமையாக சாடிய சகாதேவன்
யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா
27 டிச., 2024
மாவையை நீக்க யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை! [Friday 2024-12-27 16:00]
![]() மாவை.சோ.சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து பதவி விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பைச் செய்தபின்னர் எந்தவொரு அனுமதியையும் யாரிடமும் பெற வேண்டுமென்று யாப்பில் கூறப்படவில்லை என்று தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
நானே தலைவர்- வாக்கெடுப்பை நடத்த முடியாது! [Friday 2024-12-27 05:00]
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நான் விலகவில்லை. அதன் பிரகாரம் கட்சியின் தலைமைப் பதவியில் நானே தலைவராகத் தொடர்கின்றேன். ஆகவே தலைமைப் பதவி தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்தவேண்டிய அவசியமில்லை என்று மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார். |
பொதுச்சபையின் அனுமதியின்றி மாவையை நீக்க முடியாது! [Friday 2024-12-27 16:00]
![]() இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரை மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்தியகுழு உறுப்பினரையும் பொதுச்சபையின் அனுமதியின்றி நீக்கமுடியாது என்று அக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் ஊடகப்பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். |
ஞானமுத்து சிறிநேசன் எம்.பி தெரிவிக்கையில், |