அத்துடன் இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தான் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். இன்று (04) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தெரிவிக்கையில் வவுனியா நீதிமன்றம் மற்றும் ஹப்பற்றிக்கொல்லாவ நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு சுன்னக்கல் எடுத்துச் செல்லப்படுவதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டி காட்டியுள்ளது. பிரச்சனை இருந்தால் எம்முடன் கலந்துரையாடி தெளிவடைந்திருக்கலாம் அதை விடுத்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது வாகனத்தை நடுவீதியில் நிறுத்தி, சட்டத்தை தன் கையில் எடுத்தது தவறு என சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிவந்த கனரக வாகனம் ஒன்றை மறித்து அந்த வாகனத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நிறுவன உரிமையாளர் இவ்வாறு ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். |