புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2025

ஓமந்தையில் தனியார் காணியை அபகரித்து பொலிசார் விகாரை அமைக்க முயற்சி! [Tuesday 2025-07-01 17:00]

www.pungudutivuswiss.com




ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியினை பொலிஸார் அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வருகிறது.

ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியினை பொலிஸார் அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரிய வருகிறது.

A9 வீதியில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை திங்கட்கிழமை (30) அன்று துப்புரவு செய்த ஓமந்தை பொலிஸார் குறித்த இடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும் அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக் காணி தனக்குரிய தனது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே பொலிஸார் காணியை துப்பரவு செய்துள்ளனர்.

இந்த நிலையிலேயே காணி உரிமையாளரை அச்சுறுத்தி துப்புரவு செய்ததாகவும் தெரிய வருவதோடு குறித்த காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்த காணியை உரிய நபருக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

ad

ad