புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2025

பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு

www.pungudutivuswiss.comம்

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தனியார் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் (ministry of education) ஆலோசித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில், வட மத்திய மாகாணத்தில் (north central povince) தனியார் கல்வி நலையத்தில் கல்வி கற்ற மாணவர்களின் நலனுக்காக, சிங்கள மொழி இறுதி வினாத்தாள் சில ஆசிரியர்களால் கசிய விடப்பட்டது.

முழு நாட்டிற்கும் பொதுவான அணுகுமுறை 

பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையத்தில் கற்பிப்பதை தடை செய்ய மேற்கு மாகாண கல்வி அதிகாரிகள் முன்னதாக முடிவு செய்திருந்தனர். இருப்பினும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு | Restrictions On Private Tuition By School Teachers

இது தொடர்பாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,மாகாண அதிகாரிகளுக்கு இதுபோன்ற முடிவுகளை எடுக்க அதிகாரம் இருந்தபோதிலும், முழு நாட்டிற்கும் பொதுவான அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

ad

ad