இதன் காரணமாக நிகழ்ந்த தள்ளு முள்ளால் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மேலும் 5 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன்கள் வாங்குவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளிவில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்து திருமலையில் உள்ள ஏழுமலையானைத் தரிசிக்க முடியாத வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களிலும் ஏழுமலையானுக்குக் கோயில்கள் அமைக்கும் பணியைத் திருப்பதி தேவஸ்தான அமைப்பு தொடங்கியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, சென்னை, டெல்லி, புவனேஷ்வர், ஹைதராபாத் மற்றும் ஜம்மு ஆகிய 6 இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர். |