புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2025

செம்மணியில் சுமதியின் எலும்புக்கூட்டைக் கண்டதும் கதறியழுத தாய்

www.pungudutivuswiss.com
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரங்கள் தற்போது அதிகமாக
பேசப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அரியாலை முள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற ஒருவிடயம் அந்தக்காலப்பகுதியில் பெரிதாக பேசப்பட்டது.

குறித்த பகுதியிலிருந்த சுமதி என்ற பெண் தனது கணவனுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது கணவனை இராணுவத்தினர் அழைத்து சென்றுள்ளனர்.

அவருடன் சேர்ந்து சுமதியும் சென்றநிலையில் அவர் தகாதமுறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சுமதி என்ற பெண்ணின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட போது அவரின் உடைகளின் சில பகுதிகள் காலில் அணிந்திருந்த மெட்டி எடுக்கப்பட்ட போது சுமதியின் தாய் உருக்கத்தோடு கதறியழுதுள்ளார்.

ad

ad