புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திணறிய விமானங்கள்

www.pungudutivuswiss.com
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு
விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம்
விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இன்று காலை கட்டுநாயக்க பிரதேசத்தில் நிலவிய பனிமூட்டமான காலநிலை காரணமாக இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று அதிகாலை 5:00 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யூ.எல்-226 விமானம், சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-881 விமானம்,

வாகன ஏல விவகாரம்! திணைக்களங்களுக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பு
வாகன ஏல விவகாரம்! திணைக்களங்களுக்கு அரசாங்கம் விசேட அறிவிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
இந்தியாவின் பெங்களூரில் இருந்து அதிகாலை 05-05 மணிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-174 விமானம் என்பன மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.


கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திணறிய விமானங்கள் | Srilankan Flights Diverted To India And Mattala

மேலும், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று காலை 06:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம், இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


'நிலவில் சிகிரியா' வேலைத்திட்டம்! சுற்றுலா பயணிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு
'நிலவில் சிகிரியா' வேலைத்திட்டம்! சுற்றுலா பயணிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

அடர்ந்த மூடுபனி
கட்டுநாயக்காவில் இருந்து திருப்பி விடப்பட்ட விமானங்கள் காலை 09:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திணறிய விமானங்கள் | Srilankan Flights Diverted To India And Mattala

காலை 07.00 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழ்ந்திருந்த அடர்ந்த மூடுபனி படிப்படியாக குறைந்து தற்போது விமான நிலையம் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதால், விமான சேவைகள் சாதாரணமாக நடைபெறுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ad

ad