புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2025

இலங்கை 140 ஓட்டங்களால் அபார வெற்றி.

www.pungudutivuswiss.com

இலங்கை 140 ஓட்டங்களால் அபார வெற்றி.
ஆறுதல் வெற்றியுடன் ஒருநாள் தொடரினை நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி
சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை 140 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 2-1 என ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
இலங்கை – ஆஸி. டெஸ்ட் தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு
இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி முன்னதாக ஒக்லேண்டில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாட தீர்மானித்தனர்.
இப்போட்டிக்கான இலங்கை தொடரினை ஏற்கனவே இழந்த நிலையில் மாற்றங்களின்றி களமிறங்கியது. அதன்படி துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு பெதும் நிஸ்ஸங்க அதிரடி ஆரம்பத்தினை வழங்கினார். அதிரடி அரைச்சதம் பெற்ற அவர் முன்னர் 31 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சிறு உபாதை காரணமாக மைதானத்தினை விட்டு வெளியேறினார்.
எனினும் புதிதாக வந்த கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் ஜோடி இலங்கை தரப்பினை பலப்படுத்தியது. இந்த வீரர்களில் குசல் மெண்டிஸ் அரைச்சதம் பெற்ற போதும் துரதிஷ்டவசமாக, கமிந்து மெண்டிஸ் அந்த வாய்ப்பினை இழந்தார். அதன்படி குசல் மெண்டிஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 48 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுக்க, கமிந்து மெண்டிஸ் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளோடு 46 ஓட்டங்கள் பெற்றார்.
நான்காவது T20 போட்டியில் வெற்றியீட்டி தொடரை சமப்படுத்திய பங்களாதேஷ்
அதன் பின்னர் ஜனித் லியனகே, மீண்டும் துடுப்பாட வந்த பெதும் நிஸ்ஸங்க ஆகியோரது ஆட்டங்களோடு இலங்கை அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளோடு 66 ஓட்டங்கள் எடுக்க, ஜனித் லியனகே தன்னுடைய மூன்றாவது அரைச்சதத்தோடு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் பெற்றார்.
நியூசிலாந்து பந்துவீச்சு சார்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுக்களை சாய்க்க, மிச்சல் சான்ட்னர் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்ட்ட 291 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய நியூசிலாந்து அணியானது இலங்கை பந்துவீச்சாளர்களினை சமாளிக்க முடியாமல் 29.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
நியூசிலாந்து துடுப்பாட்டம் சார்பில் மார்க் சாப்மன் தனியாளாக போராடி 81 ஓட்டங்களை எடுக்க, இலங்கை பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ, மகீஷ் தீக்ஸன மற்றும் எஷான் மாலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக அசித பெர்னாண்டோ தெரிவாக, தொடர் நாயகன் விருதினை நியூசிலாந்தின் மேட் ஹென்ரி பெற்றுக் கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
Result
New Zealand
150/10 (29.4)
Sri Lanka
290/8 (50)
Sri Lanka won by 140 runs
Updated at 01:15 PM 2025-01-11
Batsmen R B 4s 6s SR
Will Young c Asitha Fernando b Maheesh Theekshana 0 8 0 0 0.00
Rachin Ravindra b Asitha Fernando 1 5 0 0 20.00
Mark Chapman b Maheesh Theekshana 81 81 10 1 100.00
Daryl Mitchell c Asitha Fernando b Eshan Malinga 2 5 0 0 40.00
Tom Latham c Wanindu Hasaranga b Asitha Fernando 0 4 0 0 0.00
Glenn Phillips c Kamindu Mendis b Asitha Fernando 0 3 0 0 0.00
Michael Bracewell c Kamindu Mendis b Janith Liyanage 13 20 1 1 65.00
Mitchell Santner c Kamindu Mendis b Maheesh Theekshana 2 15 0 0 13.33
Nathan Smith c Kusal Mendis b Eshan Malinga 17 29 1 0 58.62
Matt Henry b Eshan Malinga 12 6 1 1 200.00
William O’Rourke not out 1 3 0 0 33.33
Extras 21 (b 0 , lb 2 , nb 1, w 18, pen 0)
Total 150/10 (29.4 Overs, RR: 5.06)
Bowling O M R W Econ
Asitha Fernando 7 0 26 3 3.71
Maheesh Theekshana 7.4 0 35 3 4.73
Eshan Malinga 7 1 35 3 5.00
Janith Liyanage 3 0 16 1 5.33
Chamindu Wickramasinghe 3 0 14 0 4.67
Wanindu Hasaranga 2 0 22 0 11.00

ad

ad