புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2025

ருமேனிய- பல்கேரிய எல்லையை தாண்டிய முதலாவது பிரமுகரான தெரு நாய்

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்கேரியாவும் - ருமேனியாவும்
கடவுச்சீட்டுக்கள் இன்றி பயணிக்கும் எல்லை பகுதியை இன்று
திறந்த நிலையில், அதனை நாய் ஒன்று முதலாவது பிரமுகராக கடந்துள்ளது.
13 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் இந்த இணைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறன்றன.
இதன்படி, ஐரோப்பிய ஒற்றுமையின் அடையாளமான செங்கன் பகுதி, அதன் உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டுக்கள் இல்லாமல் செல்லக்கூடிய வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான நிதியுதவிகளை உறுதிப்படுத்திய ஜப்பானிய நிதி நிறுவனம்
இலங்கைக்கான நிதியுதவிகளை உறுதிப்படுத்திய ஜப்பானிய நிதி நிறுவனம்
ருமேனியா மற்றும் பல்கேரியா
2007 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்து வரும் ருமேனியா மற்றும் பல்கேரியாவிற்கு, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் சோதனைகளை அகற்றுவதன் மூலம் எல்லைக் கட்டுப்பாடுகளை இரண்டு நாடுகளும் தளர்த்தத் ஆரம்பித்தன.
ருமேனிய- பல்கேரிய எல்லையை தாண்டிய முதலாவது பிரமுகரான தெரு நாய் | Stray Dog First To Cross Border
இந்தநிலையில் இன்று குறித்த செங்கன் பகுதியில் எல்லை திறக்கப்பட்டபோது, எந்தவொரு முக்கிய பிரமுகரும் அந்த எல்லையை கடக்கவில்லை.
மாறாக, சோதனைச் சாவடி உயர்த்தப்பட்டபோது, ஒரு தெரு நாய், ஆரவாரம் பற்றி அறியாதது போல், எல்லையைத் தாண்டிச் சென்றது
தற்போது இது அதிகமாக பகிரப்படும் காணொளியாக அமைந்துள்ளது
எல்லை சாவடியின் தடை உயர்த்தப்பட்டு, கூடியிருந்த அதிகாரிகள் கைதட்டல் மற்றும் ஆரவாரத்தில் ஈடுபட்டபோது நாய் சாதாரணமாக கடந்து செல்வதை காணொளி காட்டுகிறது.

ad

ad