![]() யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இந்த இரு இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். |
அதேவேளை, தற்போது 10 நோயாளர்கள் எலிக்காய்ச்சல் நோயோடு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர், இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார் |