10 ஜூலை, 2019

உயர்தரம் சித்தியடையாதவர் ஜனாதிபதியாவதா?- சரத் பொன்சேகா

உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதோ, ஜனாதிபதியாக தெரிவு செய்வதோ,மக்கள் செய்யும் பாரிய தவறாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதோ, ஜனாதிபதியாக தெரிவு செய்வதோ,மக்கள் செய்யும் பாரிய தவறாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“பாராளுமன்றத்தில் 70 அல்லது 80 பேர் அளவில் தான், உயர்தரம் சித்தியடைந்துள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவர் போட்டியிட தேவையில்லை. நாட்டை முன்னேற்றக்கூடிய ஒருவரே போட்டியிட வேண்டும். நாட்டை முன்னேற்றக்கூடிய தலைவர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்வைத்தால் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்