புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2019

திருமலை 5 மாணவர்கள் படுகொலை வழக்கை மீள விசாரிக்க சட்டமா அதிபர் உத்தரவு

திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறும் சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்
திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறும் சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்

குறித்த வழக்கில் வைத்திய கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன், வை. புங்களலோகன் மற்றும் பரராஜசிங்கம் கோகுல்ராஜ் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மூவரும் இருக்கும் இடம்குறித்து அறியுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு, சட்டமா அதிபர் பணிப்புரையை விடுத்துள்ளார்.

கடந்த 2006 ஜனவரி 2ம் திகதி இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவம் குறித்த வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 12 விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி ஆகியோர் போதிய சாட்சிகள் இல்லை என தெரிவித்து நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.

முக்கிய சாட்சிகளின் முகவரிகளில் அவர்கள் இல்லை. அவர்களின் வெளிநாட்டு முகவரிகளும் இல்லை என்ற அரச தரப்பின் அறிக்கையின்படியே இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே, குறித்த வழக்கில் திடீர் திருப்பமாக முக்கிய சாட்சிகள் மூவரின் இருப்பிடம் குறித்து அறியுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டமை குறித்து சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய இரண்டு அமைப்புகளும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad