புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 ஜூலை, 2019

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ரணிலுக்கு அழைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்கு, தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்கு, தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாவது தொடர்பாக பிரச்சினைகளை எழுப்பி தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற விவாதத்தின் போது, பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தன்னை தெரிவுக்குழு முன் அழைப்பதற்கான முடிவு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் செயற்பாடா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜயசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, தெரிவுக்குழு முன் ஆஜராவது பொருத்தமானது என்று கூறினார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து மேலதிக விளக்கங்களை நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களிடமிருந்து பெறலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன் வரவழைக்கப்பட்ட ஒரு நபர் என இது குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்ப்பதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அத்தோடு இந்த சந்தர்ப்பத்தில் சபாநாயகரின் முடிவைக் கடைப்பிடிப்பது நல்லது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.