புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2019

கீத் நொயார் கொலை முயற்சி வழக்கிலும் புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு

ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, சிஐடியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, சிஐடியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான இணைப்பு அதிகாரியான அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன, சட்ட மா அதிபர் சார்பில் மேற்படி கருத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

கீத்நொயரின் கடத்தல் மற்றும் கொலை முயற்சி சம்பந்தப்பட்ட வழக்கில் மேற்படி இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளமை ஆதாரங்களுடன் தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் மேற்படி இராணுவ புலனாய்வு அதிகாரி 'ரிவிர' ஸ்தாபகரான உபாலி தென்னகோனின் தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஜூலை 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இதற்கமையவே அவரை கீத் நொயரின் கடத்தலுடனும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் சி.ஐ.டி யினரிடம் கேட்டுக்கொண்டார்

ad

ad