புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2024

படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!

www.pungudutivuswiss.com

2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும்  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும்  ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்‌ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமைஇடம்பற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

5 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி யார்?ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்விகள் இங்கு எழுப்பப்படுகின்றன. இலங்கையைப்பொறுத்த வரையில் இலங்கையில் ஆட்சியாளர்களுடைய ஆசிர்வாதத்துடன் ஆட்சியாளர்களின் ஆலோசனைகளுக்கமைவாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக ஜோசப்பரராஜசிங்கம், ரவிராஜ் எம்.பிக்கள். சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் பல்வேறு ஆதாரங்கள், தடயங்கள் கிடைக்கப் பெற்றன. ஆனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தண்டனை வழங்க முடியவில்லை என்றால் அது ஆட்சியாளர்களின் ஆலோசனைப்படி அந்தக்கொலைகள் நடைபெற்றன.

குறிப்பாக 2005,2006 ஆண்டு காலப்பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆலோசனையில் அந்த இரு எம்.பி.க்களும் கொல்லப்பட்டார்கள்.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மிகபெரிய யுத்தம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பல நாடுகளின் உதவியுடன் மிகக்கொடூரமாக கொல்லப்பட்டார்கள். அப்போதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய இருந்தார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் கத்தோலிக்க மக்களையும் அமெரிக்கா. பிரிட்டானிய சுற்றுலா பயணிகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டன என்றார்.

ad

ad