![]() தியத்தலாவ ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் கார் மோதி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கார் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற கார்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்களை மோதிக் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் குழந்தையொன்று உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |