புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2024

சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு? [

www.pungudutivuswiss.com
பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும்   இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில்   வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்?  என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான  காவிந்த ஜயவர்தன  கேள்வி எழுப்பினார்.

பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார்

பாராளுமன்றத்தில் புதன்கிழமைஇடம்பற்ற 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

உயிர்த்த ஞாயிறு தின . குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து விட்டதாக அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் எவருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்காவின் எப்.பி.ஐ. பிரிவு பல விடயங்களை குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாதி சஹ்ரானுடன் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூல கொடித்துவக்கு பலமுறை தொடர்புக் கொண்டுள்ளார். ஆகவே சஹ்ரானுக்கும்,இவருக்கும் இடையிலான தொடர்பு என்ன? என்றும் வினவினார்

ad

ad