புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2024

13 பேரின் ஆதரவை திரட்ட முடியாததால் பாராளுமன்றத்தை கலைக்கும் முயற்சி தோல்வி

www.pungudutivuswiss.com


113 எம்.பி. க்களின் ஆதரவைத் திரட்ட முடியாத நிலையில், தீர்மானம் நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைக்கமேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

113 எம்.பி. க்களின் ஆதரவைத் திரட்ட முடியாத நிலையில், தீர்மானம் நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைக்கமேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, ​​இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பு ரீதியாக திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை அறிவிக்குமாறு கோரினார்.

எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி இணங்கவில்லை. இந்த பின்னணியில், ராஜபக்சவுக்கு விசுவாசமான சில எம்.பி.க்கள், பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அவையை கலைத்து, முன் கூட்டியே பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

எவ்வாறாயினும், பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்கூட்டியே பொதுத் தேர்தலுக்கு தயாராக இல்லாத காரணத்தினால் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

பொதுத் தேர்தல் 2025 இல் நடத்தப்படவே திட்டமிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அப்படியிருந்தும், பெரும்பான்மையான எம்.பி.க்கள் அத்தகைய தேர்தலை விரும்புகிறார்கள் என்பதை நிரூபிக்க பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை அவர் கோரியிருந்தார்.

ad

ad