புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2024

உயிர்த்த ஞாயிறு படுகொலை- யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்

www.pungudutivuswiss.com

 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 5ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 5ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் இன்றுஇடம்பெற்றன.

இதன்போது, கடந்த 2029 ஏப்ரல் 21 அன்று தேவ ஆராதனையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்தவர்களுக்கு ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், தேவாலய பிரதான மணி ஒலிக்கப்பட்டு கூட்டுத் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குரு முதல்வர் ஜெயரட்ணம் அடிகளார் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். அதனை தொடர்ந்து, உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து பிரார்த்திக்கும் முகமாக மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டன.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவினர் கலந்து கொண்டனர்.

ad

ad