புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2024

மைத்திரிக்கு ஆப்பு வைத்தார் சந்திரிகா! - தலைவராக செயற்பட நீதிமன்றம் தடை.

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த விசேட செய்தியாளர் மாநாடு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அவர்கள் மேலும் கூறியதாவது, “கட்சியின் அழிவினை பார்த்துக்கொண்டிருக்க முடியாத நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நீதிமன்றத்தை நாடினார். அதற்கிணங்க, கட்சியின் தலைவராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு தடை விதிக்கப்பட்டது." என்று குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad