புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2024

மொட்டுக்குத் துரோகம் - பதவி இழப்பார் விஜயதாச?

www.pungudutivuswiss.com

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்ற நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி  தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்ற நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் விரைவில் முடிவெடுப்பார் எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கட்சியின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின்படி, ஒருவர் மற்றுமொரு அரசியல் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றவுடன் அவரது கட்சி உறுப்புரிமையை விரைவில் இழக்க நேரிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

இதனால், அமைச்சர் ராஜபக்ஷ கட்சி உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்றும், அதன் மூலம் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

“அமைச்சர் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன அங்கத்துவத்தைப் பெற்று, அதன் கீழ் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அவர் மற்றுமொரு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்ற குற்றத்தை அவர் செய்துள்ளார். அதனால், அவரது பொதுஜன பெரமுன உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும், அதன் விளைவாக, அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்" என்றார்.

ad

ad