புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2024

வெள்ளியன்று வவுனியாவில் கூடுகிறது தமிழரசின் மத்திய செயற்குழு!

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

ad

ad