-
10 செப்., 2013
இலங்கையில் நவி.பிள்ளை சந்தித்த மக்கள் மிரட்டப்பட்டமை தொடர்பில் பல நாடுகளின் பிரதிநிதிகள் கவனம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் போது அவரை சந்தித்து பேசிய மக்கள் அச்சுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் பலர் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர்.
9 செப்., 2013
மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டியெழுப்பி வழிபட அனுமதிக்க முடியுமா?: கீதாஞ்சலிக்கு சரவணபவன் சவால்
சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கீதாஞ்சலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
தலைவர்-கே.வீ.தவராசா (தலைவர்.கொழும்பு கிளை.தமிழரசு கட்சி )
காலம்-(11-09-2013 ) புதன்கிழமை மாலை 05.30
இடம்-அக்சயா மண்டபம்,37 வது ஒழுங்கை .வெள்ளவத்தை .கொழும்பு
சிறப்புரை-எம்.ஏ .சுமந்திர்டன் (பா.உ )
காலம்-(11-09-2013 ) புதன்கிழமை மாலை 05.30
இடம்-அக்சயா மண்டபம்,37 வது ஒழுங்கை .வெள்ளவத்தை .கொழும்பு
சிறப்புரை-எம்.ஏ .சுமந்திர்டன் (பா.உ )
இந்தக் கலந்துரையாடல் கொழும்புக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை 11ஆம் திகதி மாலை 5 மணிக்கு கொழும்புவெள்ளவத்தை 37வது ஒழுங்கையில் அமைந்துள்ள அக்ஷயா மண்டபத்தில் (செட்டிநாடு உணவக மண்டபத்தில்) நடைபெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ. சுமந்திரன் அவர்கள் பங்குபற்றி சிறப்புரையாற்றுவதுடன் விளக்கங்களையும் அளிக்கவுள்ளார்.
கொழும்பு வாழ் தமிழ் மக்களை இந் நிகழ்வில் தவறாது பங்குபற்றி ஆக்க பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
சுவிசில் சிறப்புற இடம்பெற்ற பொன்.சுந்தரலிங்கத்தின் இசைக்கோலங்கள்
கடந்த 06.09.2013 வெள்ளியன்று மாலை சுவிஸ் பேர்ன் நகரில் பிரபல தமிழீழ எழுச்சி பாடகர் பொன் -சுந்தரலிங்கம் அவர்களின் இசைக்கோலங்கள் என்னும் நிகழ்வு பல நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் சிறப்பாக இடம் பெற்றது கசெரிக்குபக்கவதியன்களை இலங்கை இந்திய கலைஞர்கள் வழங்கி மெருகூட்டி இருந்தார்கள் .ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட .யாழ் இளம்கலை மன்ற ஸ்தாபகரும் வானொலி தொலைக் காட்சி புகழ் கர்நாடக சங்கீத விற்பன்னருமான ,பொன்.சுந்தரலிங்கம் அவர்களின் ஜெயா தொலைக்காட்சி அனுசரணையுடன் தயாரிக்கப்பட்டகானாமிர்தம் ஒளித்தட்டு ஒன்றும் அந் நிகழ்வில் வெளியிட்டு வைக்கபட்டது. இந்த ஒலித்தட்டினை சுவிசின் வர்த்தகர்களான இம்போர்ட் தாஸ் உரிமையாளர், சு.ஸ்ரீதாஸ் அவர்களும் மற்றும் சாய் ரேடர்ஸ் உரிமையாளர் இ.ரவீந்திரன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.விழாவில் நடனநிகழ்வுகள் ,சிறப்புரைகளும் இடம்பெற்றன . ஆன்மீக சொற்பொழிவாளர் தி.ஸ்ரீஸ்கந்தராசா ,கவிஞர் மதி,எஸ்.கருணாமூர்த்தி,அ .நிமலன்.செ.சுரேஷ் ஆகியோரது வாழ்த்துரைகளும் பேச்சுக்களும் நிகழ்வுற்றன .புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புகழ்பெற்ற இந்திய மற்றும் ஈழத்துக்கலைஞர்களோடு இணைந்து, களத்திலும் புலத்திலும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.பல நூற்றுக்கணக்கான இளம்பராயத்தினருக்கு சங்கீத வகுப்புக்களை நடாத்திவருவதுடன் புலம் பெயர் நாடுகளில் தனது சங்கீத பணிகளையும் ஆற்றிவருகின்றார்.(நன்றி, நிழல்படம்- கதிரவன் )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)