கிருமித் தொற்றினால் மாணவி மரணம்! [Saturday 2025-08-09 07:00] |
![]() யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். |
குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5-ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பித்தனர். வைத்தியசாலையில் சேர்ப்பித்து சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார். தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. |
-
9 ஆக., 2025
www.pungudutivuswiss.com