புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2025

www.pungudutivuswiss.com
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை!
[Friday 2025-08-08 17:00]

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த மாதம் 23ம் திகதி பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற ரீதியில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் சபாநாயகருக்கும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நிலஅபகரிப்பு, மனித புதைகுழிகள் தொடர்பான விடயங்கள் பேசுவதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அதற்காக சந்தர்ப்பம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை கிடைத்துள்ளது.

குறித்த ஒரு நாள் விவாதத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட மனித புதைகுழிகளுக்கான சர்வதேச விசாரணை, காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தவுள்ளோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து நேற்றைய தினம் மன்னார் காற்றாலை தொடர்பான அமைச்சர் தொடர்பிலான சந்திப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ad

ad