11 நவ., 2012


அல்லைப்பிட்டியில் அமையப்பெறும் மிக பிரமாண்டமான சனசமுக நிலையம்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரப்  பகுதியில் அமைந்திருக்கும் வாகீசர் சன சமூக நிலையம் UNDP நிதியுதவியுடன் மிகவும் பிரமாண்டமாய் புனரமைக்கப்பட்டுதற்போது நிறைவை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் மிகவும் சிறியதாக காணப்பட்ட இச் சன சமூக நிலையம் தற்போது மிக பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.

UNDP யின் சனசமூக நிலையம், முன்பள்ளி கட்டிட நிர்மானம், அடிப்படைச் சமுக சேவைகளை வழங்குவதற்கும் சிறுவா்களின் ஆரம்ப கல்வியினை ஊக்குவிப்பதற்குமான தளம் அமைத்தல், எனும் எண்ணக்கருவுடன்  இச் சனசமூக நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது.

அப் பகுதி மக்கள் தங்களது சமூக கலாச்சார நிகழ்வுகளை கொண்டாடுவதற்கு ஏற்ற சிறந்த மண்டபமாக திகழ்கிறது.இவ் வாகீசர் சனசமூக நிலையமானது மிக விரைவில் வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.