11 நவ., 2012


திருச்சியில் தண்டவாளத்தில் துண்டு துண்டாக கிடந்த திமுக பிரமுகர் உடல்திருச்சி தென்னூர் மின்வாரியம் அலுவலகம் அருகே ரெயில் தண்டவாளம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 1 மணிக்கு ஒரு ஆண் உடல் கிடப்பதாக ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது.


சம்பவ இடத்துக்கூ சப்- இன்ஸ்பெக்டர் அக்பர்கான் மற்றும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். தண்டவாளத்தில் கிடந்த ஆணின் உடல் துண்டு, துண்டாகி கூழாகி கிடந்தது. பிணத்தின் அருகில் சைக்கிள் ஒன்று உடைந்து கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


அப்போது, பிணமாக கிடந்தவர் பெயர் ராஜேந்திரன், ஜீவா நகர், லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் என தெரியவந்தது. ராஜேந்திரன் தி.மு.க. பிரமுகர் ஆவார். கூலி வேலை பார்த்து வந்தார் நேற்று தில்லை நகருக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி உள்ளார்.

குடிபோதையில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்ந்து பல ரெயில்களில் மோதியதால் உடல் துண்டு, துண்டானதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்