புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2012

நாஞ்சில் சம்பத்தோடு வெளியேறப் போவது யார், யார்...! : ம.தி.மு.க.,வில் பரபரப்பு
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, சாரை பாம்பு என, கொள்கைபரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் விமர்சித்ததால், ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
கட்சியை விட்டு, அவரை நீக்க வேண்டும் என, போர்க்கொடி தூக்கியுள்ளதால்,

விரைவில் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி, சம்பத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்க, வைகோ முடிவு செய்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் பொதுச் செயலர் வைகோவை, சாரை பாம்பு என்றும், என் மகள் திருமண விழாவுக்கு வைகோ வரவேண்டாம் என, சம்பத் கூறியதும், தன் மகன் துரை வையாபுரியை, அடுத்த தலைவராக வைகோ உருவாக்குகிறார் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை, சரமாரியாக நாஞ்சில் சம்பத் அடுக்குகிறார்.
அவரிடம் எந்த விளக்கமும் கேட்காமல், கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல், வைகோ மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என, மூத்த மாவட்டச் செயலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்து, ம.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது: சங்கொலியில், "குடி கெடுக்க குடிலன்... துரோகியே தூர நில்...' போன்ற கவிதைகள், சம்பத்தை குறித்து எழுதவில்லை. சம்பத்திற்கு பொதுச்செயலர் பதவி ஆசை வந்து விட்டது. அதனால் தான் வாய்க்கு வந்ததை அவர் பேசுகிறார். கொள்கைபரப்பு செயலர் பதவியை, துரை வையாபுரிக்கு வழங்கினாலும் அதில் தவறில்லை. இரண்டு தொலைக்காட்சிகளில், இலக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு, சம்பத் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதற்கான ஒப்பந்தம் முடிந்ததும், அவராகவே கட்சியிலிருந்து வெளியேறி விடுவார். அவருக்கு பொறுமை இல்லை. அதனால் தான், தன்
மகளின் திருமணத்திற்கு வைகோவை வரவேண்டாம் என, பகிரங்கமாக தெரிவித்து விட்டார். சம்பத்திற்கு ஆதரவாக, மாநில நிர்வாகி ஒருவர் செயல்படுகிறார். வைகோவிடம் அந்த நிர்வாகி, சம்பத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவரது பேச்சு, வைகோவுக்கு அதிருப்தியை அளித்துள்ளது. இதனால், அந்த நிர்வாகி தற்போது எந்த கூட்டங்களிலும் வராமல் ஒதுங்கி இருக்கிறார். சம்பத் வெளியேறும் போது, அந்த நிர்வாகியும் வெளியேறி விடுவார். சம்பத்தை நீக்க வேண்டும் என, மாவட்டச் செயலர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், விரைவில் மாவட்டச் செயலர்கள் கூட்டம் கூட்டப்பட்டு, சம்பத்தை நீக்குவது குறித்து வைகோ முக்கிய முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad