புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2012

ஜெனீவாவின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்திய பணமுதலைகள் கருப்புப் பணம் வைத்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிட்ட கெஜ்ரிவால், அந்த வங்கி முகேஷ் அம்பானிக்காக ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியபோது, "கடந்த வருடம் எச்.எஸ்.பி.சி. வங்கி அந்த 700 நிறுவனங்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் எச்.எஸ்.பி.சி. வங்கி அவர்கள் தவறுதலாக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த பட்டியிலை எச்.எஸ்.பி.சி. வங்கி தயார் செய்யவில்லை. அதை பிரான்ஸ் அரசு தயார் செய்ததுள்ளது. 
அம்பானிக்காக எச்.எஸ்.பி.சி. வங்கி மன்னிப்பு கேட்டது ஏன்? -கெஜ்ரிவால் கேள்வி
எச்.எஸ்.பி.சி. வங்கி ஏன் இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது? பிரான்ஸ் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் செர்வரிலிருந்து திருடப்பட்டவையாகும். முகேஷ் அம்பானியின்
வங்கி கணக்கை தவறுதலாக அவர்களுடைய கம்யூட்டர் தயார் செய்தது என்று கூற அவர்கள் முயற்சி செய்கிறார்களா? இந்த பட்டியிலில் இடம்பெற்ற நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

ஆனால் முகேஷ் அம்பானி, அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியை சந்தித்து தனது நிறுவனங்களில் சோதனை செய்யாதவாறு பார்த்துக்கொண்டார். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிரணாப் முகர்ஜி எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களில் எம்.பி.க்கள் யாரும் இல்லை என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அன்னு டாண்டனின் கணவர், இறப்பதற்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனங்களில் வருமான வரிச் சோதனையாளராக சென்றவர். 

பின்னர் அவர் அந்நிறுவனத்தின் வேலையில் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் எம்.பி. அன்னு டாண்டனின் வங்கி கணக்கில் உள்ள பணம் ரிலையன்ஸ் பணமா? அல்லது காங்கிரஸ் பணமா? அல்லது ராகுல் காந்தியின் பணமா? அரசு தொழிலதிபர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. 

சோதனை செய்யப்பட்ட மூன்று நிறுவனங்கள் சட்டத்தை மீறும் விதத்தில் தவறான தகவல்களை தந்துள்ளன. ஜெனிவா எச்.எஸ்.பி.சி. வங்கியில் முதலீடு செய்ய அவர்களின் பிரதிநிதிகள் இங்கு வீடுவீடாக செல்கிறார்கள். அரசு அவர்களை கைது செய்யவேண்டும். அவர்கள் மீது விசாரணை மேற் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad