11 நவ., 2012          லங்கையில் தமிழினப்படுகொலை நடத்திய ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் கவனம் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. 

"இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும்' என்று வலியுறுத்தும் மாநாடு 7, 8, 9 தேதிகளில் லண்டன் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடந்து முடிந்திருக்கிறது. பிரித்தானிய தமிழர் பேரவையும் தமிழர் பிரச்சினைக்கான இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவும் இணைந்து இந்த மாநாட்டை நடத்தியிருக்கின்றன. மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த மாநாட்டில், இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் 71 எம்.பி.க்களும் பிரித்தானிய தமிழர் பேரவையின் 20 பேரும், தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 40 பேரும்  இதில் கலந்துகொண்டனர்.

தமிழகத்திலிருந்து தி.மு.க. சார்பாக ஸ்டாலின், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ராதாகிருஷ்ணன், பா.ம.க.வில் கோ.க.மணி, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், சி.பி.ஐ. டி.ராஜா, தா.பாண்டியன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத், மே-17 இயக்கத்தின் திருமுருகன்காந்தி, நாம் தமிழர் கட்சி அய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்ட னர். இலங்கையிலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுரேஷ் பிரேமச் சந்திரன், தமிழ்தேச மக்கள் முன்னணி எம்.பி.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் பல அமர்வுகள் மூலம் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.thx nakiran