புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 நவ., 2012

வலுவான நிலையில் தென்னாபிரிக்கா
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவின் அம்லா 90 ஓட்டங்கள் எடுக்க தென்னாபிரிக்க அணி வலுவான நிலையிலுள்ளது.தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் பிரிஸ்பேனில் விளையாடி வருகின்றது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஸ்மித் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
 

இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அம்லா மற்றும் அணித்தலைவர் ஸ்மித் ஆகியோர் ஆரம்பித்தனர். அணித் தலைவர் ஸ்மித் (10) ஆரம்பத்திலேயே ஏமாற்றமளிக்க, அம்லாவுடன் ஜோடி சேர்ந்த அல்வீரோ பீட்டர்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்வீரோ பீட்டர்சன் (64) அரைச்சதம் கடந்து ஆட்டமிழநடதார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய அம்லா டெஸ்ட் அரங்கில் தனது 24ஆவது அரைச்சதத்தை பதிவு செய்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கலிஸ் டெஸ்ட் அரங்கில் 56ஆவது அரைச்சதத்தை பதிவு செய்தார். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை எடுத்திருந்தது. அம்லா (90), கலிஸ் (84) ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பாக பெட்டின்சன் மற்றும் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.