11 நவ., 2012


17 வயது பெண்ணை கடத்தி கற்பழித்த எம்.எல்.ஏ. மகன் மீது போலீசில் புகார்

உ.பி.மாநிலம், பசரா என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ., மவுலானா ஜமீல் அகமது என்பவரது மகன், மற்றும் இருவர் கடத்திச் சென்று அருகில் உள்ள காட்டில் வைத்து கற்பழித்த சம்பவம்
அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 பேரிடம் கற்பை இழந்த அந்த இளம்பெண் எம்.எல்.ஏ.,வின் மகன், மைத்துனர் மற்றும் அடையாளம் தெரியாத இன்னொரு நபர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்.எல்.ஏ., எதிர்க்கட்சிகள் தன் மீதும், தன் மகன் மீதும் கூறும் அபாண்டமான பொய் குற்றச்சாட்டு இது என்று கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை. புகார் அளித்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.