11 செப்., 2013

2014 உலக கிண்ண போட்டிக்கு ஐரோப்பிய வலயத்தில் இருந்துகுழு பீ இல்  இத்தாலியும் குழு டி  இல் ஹோலந்தும் முதலாம் இடத்தை இனி எந்த நாடும் முந்த முடியாத புள்ளிகளை பெற்று முன்கூட்டியே இன்று தகுதி பெற்றுள்ளன . 

குழு ஈ இல் இன்று இந்த நிலைய எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுவிட்சர்லாந்து  இன்னும் ஒரு புள்ளிக்காக காத்திருக்க வேண்டி  உள்ளது .


மீதமுள்ள அல்பானியா ,ஷ்லோவானியா ஆகிய நாடுகளுடன் மோதி ஒரு புள்ளி எடுத்தாலே போதும் முதலாம் இடத்தை எடுத்து விடும் . இதுவன்றி இரண்டு போட்டிகளிலும் தோற்றாலும்  ஐஸ்லாந்து மீதாம் உள்ள சைபிரஸ் நோர்வே உடனான போட்டிகளில் ஒன்றில் சமநிலை அல்லது தோல்வி கண்டாலே சுவிட்சர்லாந்து முதலாம் இடத்தை பிடிக்கும் . 3 ஆம் இடத்தில உள்ள ச்லோவனியா 2 போட்டிகளில்(+1) வென்றாலும் சுவிசை சமபடுதும் அனால் கோல் வித்தியாசம் சுவிசுக்கு(+9) மிக கூடுதலாக இருப்பதால் சாத்தியம் இல்லை .  விதிகள் அடிப்படையில் சுவிட்சர்லாந்து 1ஆம் இடத்தை பறி கொடுக்ககூடிய சாத்தியம் இன்னமும் உண்டு . சுவிஸ் இரண்டிலுமே தோற்று ஐஸ்லாந்து இரடிலுமே வென்றால் சுவிஸ்  2 ஆம் இடத்துக்கு வீழ வேண்டி  ஏற்படும் .

சுவிஸ் போன்றே ஜெர்மனி ,பெல்ஜியம் என்பனவும் தலா 5 புள்ளிகள் கூடுதலாக பெற்று தம் குழுக்களில் இரண்டாம் இடது நாடுகளை முந்தி நிற்கின்றன .மற்றைய குழுக்களில் கடும் போட்டி  நிலவி வருகின்றன 

தெரிவு முறை 

ஐரோப்பிய வலயத்தில் உள்ள 53 நாடுகளில் 13 நாடுகள் தெரிவாகும் . 53 நாடுகள் 9குழுக்களாக பகுக்கப் பட்டுள்ளன . குழு நிலை போட்டிகள் முடிய ஒவ்வொரு குழுவிலும் 1 ஆம் இடத்தை அடைந்த நடுகல் நேரடியாக தகுதி பெறும் . இரண்டாம் இடத்தை அடையும்9  நாடுகளில் புள்ளி சராசரி வீத அடிப்படையில் மிக சிறந்த 8 நாடுகள் இரண்டாம் பிளே ஆப் முறைக்கு தகுதி பெறும் .மற்றைய ஒன்பதாவது நாடு தகுதியை இழந்து வெளியேறும்  இவை அதிஸ்ட முறையில் 4 ஜோடிகள் ஆக்கப்பட்டு தமக்கிடையே தமது நாட்டிலும் எதிர் அணி நாட்டிலுமாக  2 தடவைகள்  மோதும் இரண்டு போட்டிகளின் மொத்த கோல் அடிப்படையில் 4 நாடுகள் தெரிவாகும்