புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2013


அம்மா உணவகங்களில் ரூ.3-க்கு 2 சப்பாத்தி
இதற்காக சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்களை கொள்முதல் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.



அம்மா உணவகத்தில் இட்லி ரூ.1-க்கும், சாம்பார் சாதம், பொங்கல், எலுமிச்சை அல்லது கறிவேப்பிலை சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
 பொது மக்களின் அமோக வரவேற்பு காரணமாக நாளொன்றுக்கு லட்சக்கணக்கான இட்லிகளும், ஆயிரக் கணக்கான சாதங்களும் விற்பனையாகி வருகின்றன.  மக்களின் ஏகோபித்த ஆதரவின் காரணமாக அம்மா உணவகங்களில் மாலை நேரத்தில் ரூ.3-க்கு 2 சப்பாத்திகளும், பருப்புக் கடைசல் அல்லது குருமாவும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
 அதன் படி, மண்டலத்துக்கு ஒரு சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரங்கள் வீதம் 15 இயந்திரங்கள் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோபாலபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சப்பாத்தி இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
 இம்மாத இறுதிக்குள் மீதம் உள்ள 14 இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து உணவகங் களிலும் பொதுமக்களுக்கு சப்பாத்தி வழங்கப்படும்.
 இம்மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு சப்பாத்தி வழங்கப்படும்.

ad

ad