புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2013


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் இரகசிய இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அரசாங்க அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலை வெற்றி கொள்வதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்க ஐக்கிய தேசிய கட்சி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், அந்த தகவல்கள் உத்தியோகபற்ற வகையில் தமக்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும குறிப்பிட்டார்.
இதுதவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கரிசணை செலுத்தி வருவதாக தெரிவித்த அவர், அது நாட்டில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் அமையுமா என்று ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, அமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் எமது செய்தி பிரிவு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ச அத்தநாயகவிடம் வினவியது.

விசேடமாக நாங்கள் வடமாகாண தேர்தலின் பொருட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புடனோ அல்லது வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தவில்லை.
ஆனால் நாங்கள் தெளிவாக ஒன்றை கூறிக்கொள்கிறோம்.
இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எந்த தரப்பினருடனும் கூட்டுச்சேர்ந்து பணியாற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக உள்ளது.
நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்தவித தவறும் இல்லை.
ஆனால் தேர்தல் பெறுபேறுகள் எவ்வாறு அமையும் என்று தெரியாது.
அரசாங்கத்தை பலமிழக்கச் செய்வதற்கு எந்த சக்தியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறோம் என்றார் திஸ்ஸ அத்தநாயக்க

ad

ad