11 செப்., 2013

பாஜகவுடன் கூட்டணியா: வைகோ பதில் 
அண்ணாதுரை பிறந்தநாளைமுன்னிட்டு, செப்.,15ல், விருதுநகர் சூலக்கரையில் ம.தி.மு.க., மாநில மாநாடு நடக்கிறது.   மாநாட்டுப்பந்தலை நேற்று பார்வையிட்ட வைகோ, லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன்,
ம.தி.மு.க., கூட்டணி சேரப்போவதாக வெளிவந்த தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.


அவர்,  ’’மத்திய காங்., கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிறந்த மக்கள் நலத்திட்டங்களை பாராட்டியும் பேசுகிறேன். அதற்காக தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி சேரப்போவதாக கூறப்படுவது வெறும் யூகம் தான். கூட்டணி லோக்சபா தேர்தலில் நான் உட்பட கட்சி வேட்பாளர்கள், எந்தத்தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தக்க நேரத்தில் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.