புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2013

வடக்கு தேர்தலை கண்காணிக்க 5 பேரை அனுப்புகிறது இந்தியா – கோபாலசுவாமியும் வருகிறார்

வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிக்க இந்தியாவில் இருந்து 5 கண்காணிப்பாளர்கள் சிறிலங்காவுக்கு வரவுள்ளனர். 

வரும் 21ம் நாள் நடக்கவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிக்க, இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் என்.கோபாலசுவாமி உள்ளிட்ட 5 கண்காணிப்பாளர்கள் இந்தியாவில் இருந்து வரவுள்ளனர்.

மேலும் ஐந்து கண்காணிப்பாளர்கள் பாகிஸ்தானில் இருந்தும், மூன்று பேர் பங்களாதேசில் இருந்தும் வரவுள்ளனர்.

நேபாளம் மற்றும் மாலைதீவில் இருந்த தலா இரண்டு கண்காணிப்பாளர்களும், ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டானில் இருந்து தலா ஒரு கண்காணிப்பாளரும் சிறிலங்காவுக்கு வரவுள்ளனர்.

கொமன்வெல்த் நாடுகளில் இருந்த வரும் கண்காணிப்புக் குழுவில், கென்யாவின் முன்னாள் துணை அதிபர், மற்றும் அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், கரிபியன் நாடுகளின் முன்னாள் மூத்த தேர்தல் அதிகாரிகள், இடம்பெறவுள்ளனர்.

இவர்கள் தவிர, பவ்ரல், கபே போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad