5 ஜூலை, 2015

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யூலை 05 ஆம் திகதி முதல் மாவீரனான மில்லர் வீரகாவியம்  ஆனார். அந்த நாளையே விடுதலைப்புலிகள் கரும்புலிகள் நாளாக பிரகடணப்படுத்தி அனுஷ்டிக்கப்படுவது வழமை. 
 
எனினும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களால் கரும்புலிதினம்  எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும்  தாயகப்பகுதியிலும் பிரத்தியேகமான இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. 
 
இன்றும்  யாழ். பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.  தமீழவிடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் கரும்புலிகளின் பங்கும் அளவிட முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை புலம்பெயர் நாடுகளில் இன்று எழுச்சியுடன் கரும்புலிகள் நாள்  அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.