5 ஜூலை, 2015

ரவிராஜ் படுகொலை ; சந்தேக நபருக்கு சிவப்பு அறிக்கை


நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் படுகொலையுடன்  தொடர்புடைய சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான்  நிரோஷா பெர்ணான்டோ சிவப்பு அறிக்கையினை விடுத்துள்ளார். 

 
கடந்த 9 வருடங்களுக்கு முன்னார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் இனந்தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். 
 
எனவே கொலையுடன்  தொடர்புடைய சந்தேகநபரான சரண் என்று அழைக்கப்படும் விவேகானந்தன் ஸ்ரீகாந்தன் என்பவர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றுள்ளார்.  
 
எனவே அவரைக் கைது செய்வதற்கு இந்த சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் வைத்து ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது