5 ஜூலை, 2015

சிரியாவின் பழமையான நகரில் 25 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை, ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியீடு 

சிரியாவின் பழமையான நகரில், 25 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவில் டமாஸ்கஸ் நகருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள பல்மைரா என்ற உலகின் பழமையான நகரத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த மே மாத இறுதியில் கைப்பற்றினர். இந்த நகரில் முதல் நூற்றாண்டு தொடங்கி 2-ம் நூற்றாண்டு வரையில் கட்டப்பட்ட பல கலை மற்றும் கலாசார சின்னங்கள் உள்ளன. இவை சிந்துச்சமவெளி நாகரீகம் போன்று பல்வேறு நாகரீகங்களின் சின்னங்களாக நின்று கொண்டிருக்கின்றன. இந்த பாரம்பரிய சின்னங்களில் பல கிரேக்க– ரோம தொழில் நுட்பம், உள்ளூர் கட்டிடக்கலையை கொண்டுள்ளன.

சிதைந்து போன இந்த நகரம் 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகர கட்டிடங்கள் அனைத்தும் பாரம்பரிய சின்னங்களாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது. .இந்த பாரம்பரிய சின்னங்கள் அனைத்தும் உருக்குலைந்து, வெறும் தூண்கள் மட்டுமே இப்போது காணப்படுகின்றன.இந்த நிலையில், பல்மைரா நகரத்தை கடந்த மே 21 ஆம் தேதி  ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதையடுத்து உடனடியாக இந்த பாரம்பரிய சின்னங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து,  தப்புமா என்ற கேள்வி எழுந்தது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமானபின்னர், பல்மைரா பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. அங்கு ஏற்கனவே 2 கல்லறைகளை சேதப்படுத்தியதுடன், பல்மைரா மியூசியத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த 6 சிலைகளையும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  பல்மைராவில், சிரிய ராணுவ வீரர்கள் 25 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவிக்கும் காட்சிகளை கொண்ட ஒரு வீடியோ தொகுப்பு சனிக்கிழமை மாலை வெளியாகி உள்ளது. இந்த வீடியோ 10 நிமிடம் ஓடக்கூடியது. வீடியோ தொகுப்பில், டாட்மூர் சிறையில் இருந்து ஒரு வாகனத்தில் 25 வீரர்களை ஏற்றுவதும், அவர்களை பல்மைராவில் உள்ள பழமையான ஒரு அரங்கத்திற்கு கொண்டு செல்வதும், அங்கு அவர்களை வரிசையாக முட்டி போட வைப்பதும், பின்னர் அவர்களை 12 அல்லது 13 வயதே ஆன இளம் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்வதும், இந்த கொடூரத்தை நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்ப்பதும் இடம் பெற்றிருக்கிறது என தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவம், மே மாதம் 27-ந் தேதி நடந்திருக்க வேண்டும் என்று சிரியாவில் உள்ள மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறி உள்ளது.
ஏற்கனவே பல்மைரா நகரை கைப்பற்றியபோது ஐ.எஸ். தீவிரவாதிகள் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். கைப்பற்றிய சில தினங்களில் 20 பேரை சுட்டுக்கொன்றனர், இப்போது 25 வீரர்களை கொன்று குவித்து, வீடியோ வெளியிட்டிருப்பது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 