5 ஜூலை, 2015

அகதிகளால் பிரான்ஸ் – பிரித்தானியா போக்குவரத்து பாதிப்பு


பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை இணைக்கும் சுரங்கப்பாதையில் செல்லும் வாகனங்களில் ஏராளமான அகதிகள் கள்ளத்தனமாக பயணம் செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையேயான போக்குவரத்துக்கு பாலமாக விளங்குவது கால்வா
ய் சுரங்கமாகும்.
இந்நிலையில் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு அகதிகள் கள்ளத்தனமாக செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு.
இதை தடுப்பதற்காக இரு நாடுகளும் பல முயற்சிகள் எடுத்துவருகின்றன. இந்நிலையில் நேற்று 130 அகதிகள் வரை கள்ளத்தனமாக பிரித்தானியா செல்ல முயற்சி செய்துள்ளனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 3000 அகதிகள் பிரான்சில் இருந்து பிரித்தானியா செல்வதற்காக சுரங்கப்பாதை அமைந்துள்ள கலே பகுதியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.