புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2015

ஆயிரம் பூக்கள் மலரட்டும்! ஐனநாயக போராளிகள் கட்சியை நேசக்கரம் நீட்டி வரவேற்போம்!! ஈ.பி.டி.பி


தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும்
ஐனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம்
என்று ஊடக நண்பர்கள் எழுப்பிய கேள்வியின் போது
ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,..
அரசியல் கட்சிகள் தோன்றுவதும், அவைகள் சுதந்திரமாக செயற்படுவதும் அவரவர் ஐனநாயக உரிமை! அதை மறுப்பதும், தடுப்பதும் அப்பட்டமான ஐனநாயக மறுப்பாகும்.
முன்னாள் போராளிகள் வெறுமனே புனர்வாழ்வு பெற்றுவிட்டு
ஊமைகளாக உறங்கிக்கொண்டிருக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.
புதிய கட்சிகளின் வரவை எண்ணி சிலர் அச்சப்படுவது தாம் கொண்டிருக்கும் அரசியல் கொள்கை மீதான நம்பிக்கையீனங்களையே எடுத்துக்காட்டுகிறது.
எமக்கென்றொரு இலட்சியக்கனவுண்டு. அதற்கான நம்பிக்கை தரும்
யதார்த்த வழியும், கொண்ட கொள்கையின் உறுதியும் எம்மிடம் உண்டு. அந்த வகையில் எந்தவொரு புதிய கட்சிகளின் வரவையும் நாம் நேசமுடன் வரவேற்க என்றும் தயாராகவே இருப்போம்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும்! ஒவ்வொரு கட்சிகளும்
எமது மக்களின் இலட்சிய நலன் சார்ந்து யதார்த்த வழியில் செயலாற்றி புனித இலட்சிய பயணம் தொடரட்டும்.
அனுபவங்களை பாடங்களாக ஏற்று திருத்தி எழுதிய பாதையில்
தீர்வின் திசை நோக்கி யார் வந்தாலும் வரவேற்போம்.
இவ்வாறு ஊடக நண்பர்கள் எழுப்பிய கேள்வியின் போது ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருந்தார்.
ஊடக செயலாளர்
ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி ஈ.பி.டி.பி

ad

ad