புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2015

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறாராம் கோத்தா


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
எனினும் அவர், எந்த கட்சியில் போட்டியிடபோகின்றார் என்று தெரியவரவில்லை. இதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மீது சுமத்தப்பட்டுள்ள நிதிமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக அவர், இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வருவார் என்றும் தெரியவருகின்றது.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரமேஜயந்தவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படும் சந்திப்பின்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
இதேவேளை முன்னாள்  ஜனாதிபதியின்  சகோதரரரான கேத்தபாய ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும்  தான் முழுமையான பதிலை வழங்க 90 நாள்கள் அவகாசம் தரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ad

ad