5 ஜூலை, 2015

5இலட்சத்து 29 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி; யாழ். அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அரச அதிபர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார். 
 
ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள 8ஆவது பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 22 ஆயிரத்து 57 பேரும், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 47 ஆயிரத்து 621 பேரும், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 63 ஆயிரத்து 217 பேரும் , மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 54 ஆயிரத்து 567 பேரும்,  கோப்பாய் தேர்தல் தொகுதியில் 55 ஆயிரத்து 891 பேரும், உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 39 ஆயிரத்து 204 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
 
மேலும் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 36ஆயிரத்து 138பேரும், சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 51 ஆயிரத்து 702 பேரும், நல்லூர் தேர்தல் தொகுதியில் 46 ஆயிரத்து 699 பேரும் , யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் 33ஆயிரத்து 50 பேரும் , கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 79 ஆயிரத்து 93 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.