26 அக்., 2015

வடக்கில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 வருடங்களுக்காவது சொந்த மாகாணத்தில் வேலை செய்ய வேண்டும்:

வடக்கில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 வருடங்களுக்காவது சொந்த மாகாணத்தில் வேலை செய்ய வேண்டும்:
பட்டப்படிப்பை முடிக்கும் எமது மாணவர்கள் தமது மண்ணுக்கு குறைந்தது மூன்று வருடங்களாவது பணியாற்ற வேண்டும்
என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பொறியியல் படித்த மாணவர்கள் வெளிநாடுகளுக்கே அதிகம் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாகாணங்கள் குறித்து வெளியில் இருந்து கருத்துக் கூறுபவர்கள் ஆகக் குறைந்ததது தமது சேவைகளை எங்களுக்கு வேண்டியவாறு தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொறியற்பீட மாணவர்கள் தமது படிப்பு முடிந்ததும் சிங்கப்புர், மலேசியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளை நோக்கிச் சென்று விடுவதாகவும் தெரிவித்த அவர் மருத்துவபீட மாணவர்கள் படிப்பை முடித்ததும் கொழும்பை நோக்கி நகர்வதாகவும் குறிப்பிட்டார்.

வட கிழக்கு மாகாணங்களில் சேவையாற்ற பின் நிற்பதுடன் மேற்கு நாடுகளில் குடியிருக்கச் சென்று விடுவதாகவும் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் அங்கிருந்து ஈழத்தை பிரித்துக்கொடுக்குமாறும் மக்களின் நிலை பற்றியும் பேசுவதாகவும் தெரிவித்தார்.

இதை பிழையென கூறவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர் அது அவர்களின் கடமை என்றும் அதைவிட பாரிய கடமை சொந்த மாகாணத்தில் பணியாற்றுவதிலேயே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர்களை மேம்படுத்தும் விதமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பட்டப்படிப்பை முடிப்பவர்கள் பணி செய்வது அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.