புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2015

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9பேரையும்
   எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றில் மேற்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஊர்காவற்றுறை நீதிமன்ற  நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார்.
இன்றைய தினம் சந்தேக நபர்களில் ஒருவர், இந்த வழக்கை துரிதப்படுத்துமாறும்,வழக்கில்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய குடும்பத்தின் மரியாதை இழக்கப்பட்டிருப்பதாக மன்றில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதவான், நீங்கள் சந்தேகத்தின் பேரிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றீர்கள். இந்த வழக்கில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதனாலேயே, வழக்கின் தீர்ப்பு தாமதமாகின்றது. தீர்ப்பு வரும் வரை நீங்கள் சந்தேக நபர்கள் தான் குற்றவாளிகள் அல்ல எனவும் நீதவான் தெரிவித்தார்.

ad

ad