புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2015

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்குதிருட்டு குற்றத்திற்கு மூன்றரை வருட சிறைத்தண்டனை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தால் மூன்று அரை வருட
சிறைத்தண்டனையும் ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டு உள்ளது.

குறித்த தண்டனை மாணவியின் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரின் பிறிதொரு குற்றமான திருட்டு குற்றத்திற்கே வழங்கப்பட்டு உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு புங்குடுதீவு 10ம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றினை உடைத்து அங்கிருந்த 22 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடி விற்றது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின் குமார் தலைமையில் நடைபெற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த அம்பிகாவதி என்பவர் தனது வீட்டினை கவனிக்குமாறு சரஸ்வதி சிவலோகநாதன் (படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார்) என்பவரிடம் கூறிவிட்டு கொழும்பு சென்றுள்ளார்.

ஒரு நாள் சரஸ்வதி சிவலோகநாதன் ஆலயத்திற்கு  சென்று விட்டு வீடு திரும்பிய வேலை அம்பிகாதேவியின் வீட்டு கதவு திறந்து இருந்ததை அவதானித்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த மூன்று கதிரைகள் மற்றும் இரண்டு மெத்தைகள் என்பன காணாமல் போயிருந்ததை அவதானித்து  தொலைபேசி மூலம் அம்பிகாதேவிக்கு அறிவித்துள்ளார்.

அவர் கொழும்பில் இருந்து புங்குடுதீவில் உள்ள தனது வீட்டுக்கு வந்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் களவாடப்பட்ட பொருட்கள் புங்குடுதீவை சேர்ந்த பிறிதொருவருக்கு விற்கப்பட்டதை அறிந்து அங்கு சென்று களவாடப்பட்ட பொருட்களை மீட்டனர்.

களவாடப்பட்ட பொருட்களை வாங்கியவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த பொருட்களை (மாணவியின் படுகொலையின் பிரதான சந்தேக நபர்) பூபாலசிங்கம் தவக்குமார் என்பவரே மூவாயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுகொண்டு அப் பொருட்களை தன்னிடம் விற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் பூபாலசிங்கம் தவக்குமார் என்பவரை பொலிசார் கைது செய்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதுடன், களவாடப்பட்ட பொருட்களையும் சான்று பொருட்களாக நீதிமன்றில் சமர்பித்தனர்.

அத்துடன் முதலாவது சாட்சியமாக வீட்டின் உரிமையாளரான அம்பிகாதேவியையும் இரண்டாவது சாட்சியமாக (படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார்) சரஸ்வதி சிவலோகநாதனையும் , மூன்றாவது சாட்சியமாக களவாடப்பட்ட பொருட்களை வாங்கிய நபரையும் நீதிமன்றில் பொலிசார் முன்னிலை படுத்தியதுடன், நான்காவது சாட்சியமாக பொலிசார் தாமும் முன்னிலை ஆகி இருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வழக்கின் தீர்ப்பு அளிக்கபட்டது. குறித்த வழக்கு தொடர்பில் நீதவான் தீர்ப்பளிக்கையில்,

பூபாலசிங்கம் தவக்குமார் என்பவர் தான் களவில் ஈடுபடவில்லை எனவும், பொலிசார் தன் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்கள் எனவும் , தான் நிரபராதி எனவும் மன்றில் தெரிவித்து இருந்தார்.

அது தொடர்பில் மேற்கொள்ளபப்ட்ட விசாரணைகளில் முதலாவது சாட்சியமும் இரண்டாவது சாட்சியமும் பொருட்களை களவாடியவர்களை தாம் காணவில்லை என தெரிவித்து இருந்தனர்.

களவாடப்பட்ட பொருட்கள் என பொலிசாரால் சான்று பொருளாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று கதிரைகளும் இரண்டு மெத்தைகளும் களவாடபட்ட பொருட்கள்  தான் என முதலாவதும் இரண்டாவதும் சாட்சியங்கள் அடையாளம் காட்டி யுள்ளார்கள்.

மூன்றாவது சாட்சியமான களவாடப்பட்ட பொருட்களை வாங்கிய நபர்  பூபாலசிங்கம் தவக்குமார் எனும் நபர் அந்த பொருட்கள் தன்னுடைய அக்காவின் வீட்டில் இருந்து கொண்டு வந்ததாக கூறி  அவற்றை  தன்னிடம் மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.

மூன்றாவது நபரின் சாட்சியத்தின் அடிப்படையில் பூபாலசிங்கம் தவக்குமார் என்பவரை மூன்று குற்றங்களின் கீழ் குற்றவாளியாக நீதிமன்றம் கருதுகின்றது.

அதனடிப்படையில் முதலாவது குற்றத்திற்கு ஆயிரத்து 500 ரூபாய் தண்ட பணமும், இரண்டாவது குற்றத்திற்கு 2 வருட சிறைத்தண்டனையும் மூன்றாவது குற்றத்திற்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.


குறித்த வழக்கில் இன்றைய தினம் குற்றவாளியாக இனம் காணப்பட்ட பூபாலசிங்கம் தவக்குமார் என்பவரை சரஸ்வதி சிவலோகநாதன் (படுகொலை செய்யபப்ட்ட மாணவியின் தயார்) என்பவர் தான் சிக்க வைத்ததாகவும், அதற்கு பழி தீர்ப்பதற்காகவே அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவரின் மகளை கடத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்ததாக மாணவி படுகொலை செய்யப்பட்ட சில நாட்களில் பரவலாக சந்தேகங்கள் எழுப்பபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad