புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2015

போர்க்குற்றச்சாட்டு பட்டியலில் மகிந்த, கோத்தா

ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவிருந்த பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச
உட்பட 48 பேருக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும், போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டு,அந்த பிரேரணையில் இலங்கைக்கு எதிராக ஆபத்தான பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் எங்கள் இராணுவத்தினரை சிறையில் அடைத்து, சிறையில் அடைக்க முடியாதவர்களை “நிர்வாக செயல்முறையின் கீழ் பாதுகாப்பு படைகளில் இருந்து வெளியேற்றி,தேசத்தின் முதுகெலும்பாக இருந்த சக்திகளை உடைப்பதற்கு இந்த அதிகாரிகள் செயற்படுகின்றார்கள் என்பதனை குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad