26 அக்., 2015

பெயர் மாற்றப்படுமா? வெற்றிபெற்றவர்கள் விளக்கம்

டிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துக்கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய விஷால்;முதல் வேலையாக "எஸ்.பி.ஐ. சினிமாஸ்' ஒப்பந்தத்தை ரத்து செய்து. அந்த இடத்தில் பிரம்மாண்டமாக ஒரு சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எந்த மாதிரியான கட்டடத்தை எப்படி கட்ட வேண்டும் என்றும் நாங்கள் விவாதித்து இருக்குறோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கலை நிகழ்ச்சி நடத்த மாட்டோம். இளம் நடிகர்கள் சேர்ந்து தனியாக சினிமா எடுத்து நாங்கள் நிதி திரட்டுவோம். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டுவோம். அரசியல் தொடர்பாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டோம்’ நடிகர் சங்கத்துக்குள் அரசியல் இருக்காது.

இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான ஒரு குழு ஒன்று அமைக்கப்படும். அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட மூத்த நடிகர்களும் இடம் பெறுவார்கள். அவர்கள் ஆலோசனைப்படி தான் முடிவு செய்து அதன்படி கட்டிடம் கட்டப்படும். நடிகர் சங்கத்தின் அறங்காவலராக கமல்ஹாசன் இருப்பார். அதனால் தவறுகள் நடக்காமல் இருக்கும். அவரது முகம் உள்ளே இருக்கும் போது, வளர்ச்சி மிகவும் பெரிதாக இருக்கும். இனிமேல் "பாண்டவர் அணி' என்று தங்களைக் குறிப்பிட வேண்டாம் என்றும், நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்றார்.

"தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும் என்று ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கூறுகின்றனர். இதற்கு விளக்கம் அளித்த துணைத் தலைவர் பொன்வண்ணன், “எஸ்.பி.ஐ. சினிமாஸ் மூலம் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக சரத்குமார் கூறியிருக்கிறார். இதுதொடர்பான விஷயங்கள் எங்களுக்கு கிடைத்தவுடன், ஆராய்ந்து சங்கம் முடிவு எடுக்கும். எங்களது 41 தேர்தல் வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். அந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதுதான் எங்கள் முதல் கடமை. ஆனால், பெயர் மாற்றத்துக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் உள்ளன. அது முடியும் எனில் தமிழ் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுத்துவோம் என்றார்.

சங்கத்தின் நிதி குறித்து பேசிய விஷால், “தற்போதுள்ள தொகை ரூ. 21,37,017 நிரந்தர வைப்பு நிதி ரூ. 87,75,000 இருக்கிறது” என்று கூறினர்.