-

26 அக்., 2015

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம்

football2
கிளிநொச்சி முதுமுறிப்பு உதயசூரியன் பெருமையுடன் நடாத்திய உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் உருத்திரபுரம்
விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.
உதயசூரியன் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலகங்களில் பதிவு செய்த கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்தில் தெரிவான வட்டக்கச்சி லக்கிஸ்ரார் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் மோதியது. இதில் 3:1 என்ற கோல்கணக்கில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த இ.பத்மகுமார் தெரிவுசெய்யப்பட்டார்.
football1

ad

ad